நடிகர் விவேக் மறைவிற்கு பிரபல நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகர் விவேக். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும், பல அரசியல் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் சத்யராஜும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விவேக் மறைவிற்கு ஆறுதல் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.