Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி ADMKவை பார்க்கமுடியல…! கொத்தாக OPSயை சந்தித்த நிர்வாகிகள்.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சென்னை கழகத்தினர்…!!

தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்டு இருக்கின்ற ஓபிஎஸ் அணி சார்பில், மாவட்ட கழகத்தின் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.  இதில்,  101 வது வட்டத்தின் உடைய செயலாளர் திரு  ராஜு, முன்னாள் வட்ட செயலாளர் திரு பக்தவச்சலம், முன்னாள் எம் ஜி ஆர் மன்றத்தினுடைய துணை செயலாளர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இந்த இயக்கத்திலே பல்வேறு பொறுப்புகளில் உள்ள பேரவை, இளைஞர் பாசறை, இளைஞர் அணி இப்படி பல்வேறு பொறுப்பாளர்கள் வந்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஒரு நிர்வாகி, மாவட்டத்தினுடைய ஆற்றல் மிகுந்த செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி அவர்களின் தலைமையிலே, நாங்கள் எல்லாம்  ஓபிஎஸ் அவர்களை சந்தித்து எங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக வருகை தந்திருக்கின்றோம். நாங்கள் மரியாதைக்குரிய கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓபிஎஸ் அவர்களை   சந்திக்க வருகை தந்திருக்கின்றோம்.

எதற்காக  இந்த சந்திப்பு என்பதை சொல்ல விரும்புகிறேன் என்று கூறிய, ஐயா ஓபிஎஸ் அவர்கள் தலைமையிலே இருக்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தான் அடிமட்ட தொண்டர்கள் விரும்புகிற அதிமுக. ஆனால் இன்றைக்கு  இப்படியே இந்த இயக்கம், தற்போது போய்க் கொண்டிருப்பதை பார்க்கின்றபோது எங்களால்,  அதை சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதால் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து எங்களுடைய ஆதரவை  தெரிவிக்க மாவட்ட கழகத்தின் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி அவர்களின் தலைமையில் வந்தோம். ரெட்சன் அம்பிகாபதி அவர்கள் தலைமையில் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |