ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் விளையாட மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 அன்று தொடங்கி நவம்பர் 10 வரை 53 நாட்கள் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி ஐபிஎல் போட்டி குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது ” அனைத்தையும்விட விசுவாசம் மிகவும் முக்கியம்.
https://twitter.com/imVkohli/status/1292333248941445122
ஐபிஎல் போட்டியில் விளையாட காத்திருக்க முடியாது என கூறியுள்ளார்.” பெங்களூரு அணி ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இறுதிச்சுற்றுக்கு மூன்று முறை தகுதி பெற்ற இந்த அணி ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தையே பிடித்துள்ளது.