மகரம் ராசி அன்பர்களே…! இன்று வீண் வம்புக்கு செல்லாது இருப்பது ரொம்ப நல்லது. பெண்களால் விரய செலவுகள் ஏற்படும். செலவுகளை குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள். இன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும்.
இன்று எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டுமே அதனால் தன்னம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும் கவலையில்லை. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். செரிமான போன்ற பிரச்சினைகள் எழக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது வேகம் மட்டும் காட்டாதீர்கள். வாடிக்கையாளர்களை கொஞ்சம் அன்பாக வழிநடத்துங்கள். அக்கம்பக்கத்தினரிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். அவரிடம் அன்பாக பேசவேண்டும். கூடுமானவரை வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும் .
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிற மின்னும் நட்சத்திரம்