Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…”சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்”.. பதவி உயர்வு பெறுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..!!  இன்று நட்பின் பெருமையை நீங்கள் உணர்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல் வாதிகள் பதவி உயர்வு இன்று பெறலாம். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம், நல்ல முன்னேற்றமான சூழ்நிலை சந்திக்கக்கூடும். லாபம் கொஞ்சம் குறைவாகத்தான் வரும் கவலை வேண்டாம். சிறப்பாகவே அனைத்தும் நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயல் ஆற்றுவது ரொம்ப நல்லது. இன்று வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். யாரிடமும் எந்தவித கடன்கள் மட்டும், இன்று வாங்காதீர்கள். அதுமட்டுமில்லாமல் வாக்குவாதங்கள், யாரிடமும் செய்யாதீர்கள். இன்று மாணவர்கள் மிக முக்கியமாக சக மாணவரிடம் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களைப் படியுங்கள், வெற்றிக்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் மஞ்சள் நீரும்

Categories

Tech |