Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் இராசிக்கு… “வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள்”… விலகிச் சென்றவர்கள் தேடி வருவார்கள்.!!

மற்றவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பிறருக்காக எந்த வித பொறுப்புகளையும் நீங்கள் ஏற்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமங்களை திறமையுடன் சரிசெய்வீர்கள். சுமாரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மித வேகத்தை  பின்பற்றுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

விலகிச் சென்றவர்கள் மீண்டும் தேடி வரக்கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இருந்தாலும் பேசும்போது மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது உங்கள் பொருட்கள் மீது கவனம் செலுத்துங்கள். அந்த விஷயத்தில் மிக மிக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே போல முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது காரியத்தில் ஈடுபடும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள்.  அனைத்து விஷயம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |