உயர்வான சிந்தனையும் தெய்வ பக்தியும் கொண்ட மகர ராசி அன்பர்களே…!!இன்று மனதில் புதிய நம்பிக்கை உருவாக்கும். உங்களுடைய செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலமான சூழ்நிலை உருவாகும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். நல்ல யோகமான பலன்களை இன்று நீங்கள் அனுபவிக்க கூடும். இன்று குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மிகக் கவனமாகக் கையாண்டால் அந்த பிரச்சினை சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனைகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடும்.
அதனாலேயே உங்களுக்கு கோபம் தலைதூக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நன்மை கொடுக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் சரி இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை நீங்கள் மனம் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்