பொது நலக் காரியங்களில் அதிக அளவு ஈடுபாடு கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிறருக்கு உதவி செய்வீர்கள். பெண்களால் லாபம் ஏற்படும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் கவலை கொஞ்சம் ஏற்படலாம். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயத்தை நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் எளிதில் வசிகரிக்கும் திறமை இன்று அதிகரிக்கும். செல்வம் பலவழிகளில் வந்து சேரும். உங்களுடைய வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகிச் செல்வார்கள். முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும். அன்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இன்று இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது காவி நிறத்தில் ஆடை அல்லது காவி நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : காவி மற்றும் மஞ்சள் நிறம்