Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம்”… திருமண முயற்சிகள் கைகூடும்..!!

தன் குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கக் கூடிய மகரராசி அன்பர்களே.!! இன்று செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். கடின பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தொழிலில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். முக்கியமான செலவுகளுக்கு பணம் கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்கள். இன்று குடும்பத்தில் இருந்த சிக்கல் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பண வரவு இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி அன்பு இருக்கும். பிள்ளைகளிடம் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.

உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில்  தேர்ச்சி பெறுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுபோலவே நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்தை செய்யும் பொழுது உங்களுக்கு எப்பொழுதுமே மஞ்சள் நிறம் ஒத்துழைப்பு கொடுக்கும். நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் மனதார விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் சூரிய நமஸ்காரமும் சேர்த்துச் செய்யுங்கள். வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |