Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்”… உங்களை மற்றவர்கள் குறை சொல்லக்கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கு கடின உழைப்பு தேவைப்படும். உறவுகளின் தொல்லையால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது. கூடுமானவரை வாக்குவாதங்கள் நடக்கும் இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டாம். அதேபோல நீங்கள் யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். தயவு செய்து மிக முக்கியமாக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். அதை பார்த்துக் கொள்ளுங்கள். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி தான் இருக்கும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். மனதில் சஞ்சலம் இருக்கும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுகள் கிடைப்பதில் கொஞ்சம் கடினமான சூழலில் தான் இருக்கும். உங்களை மற்றவர்கள் குறை சொல்லக்கூடும்.

அந்த விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைத்துதான் படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அதே போல உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக எழுந்து நின்று ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்தை செய்யும்போதோ சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் படிப்படியாக குறையும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |