மகரம் ராசி அன்பர்களே..!! நேர்மை மற்றும் சத்திய குணத்தை பின்பற்றக் கூடியவர்கள். சோதனைகளைத் தாண்டி உரிய நன்மை வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்க கூடிய அனுகூலம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அதே போல் மனதில் இனம்புரியாத கவலை இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். வெளியூர்ப் பயணத்தின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும்பொழுது ஊதா நிறத்தில் கைக்குட்டை அல்லது ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட்டு செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்