மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரை மட்டும் குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் கொஞ்சம் வரலாம். பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகிச்செல்லும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். இன்று மனதில் ஏதேனும் கவலை பயம் அவ்வப்போது வந்து செல்லும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். யோசித்து பேசுங்கள். ஆன்மீக எண்ணம் கூடும். உடன் இருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களை தவிர்த்து சாதுரியமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்துசேரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அது போல வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
இன்று வீண் அலைச்சல் கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். மனம் ஓரளவு மகிழ்ச்சியாக காணப்படும். கூடுமான வரை நிம்மதியாக இருப்பதற்கு ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லை இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி வாழ்க்கையை செழிப்பான வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்