Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “மன தைரியம் கூடும்”… சமாளித்து முன்னேறுவீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று முன் கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. பண  வரவு சிறப்பாக இருக்கும்.  மன தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.

ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம் பார்த்துக்கொள்ளுங்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் உங்களுக்குக் கிடைக்கும். மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி தங்கும்.

இன்று வெளியிடங்களுக்கு நீங்கள் செல்லும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று மகா அன்னாபிஷேகத்தை கண்டு களியுங்கள். இந்த மகா அன்னாபிஷேகம் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வற்றாத செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |