மகரம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியம் கூடும் நாளாக இருக்கும். மனதில் தெம்பும் தெளிவும் நிறைந்திருக்கும். பொதுநல வாழ்க்கையில் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இருப்பவரின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.
அவர்களது போக்கில் விட்டுப் பிடியுங்கள். மனதில் இருந்த வீண் கவலை விலகிச்செல்லும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். எதிரிகளும் இன்று விலகிச் செல்வார்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு நிம்மதியாக காணப்படும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கவனமுடன் பாடங்களை படிக்க வேண்டும்.
படித்த பாடத்தை நினைவில் வைத்துக்கொள்வதற்கு ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பு. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்