மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பயணங்களில் மட்டும் கவனம் இருக்கட்டும். குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் இன்று ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுக்களை இன்று பெறாது. கவனமாக படித்தால் கல்வியில் வெற்றிகளை மாணவர்கள் குவிக்கலாம். கூடுமானவரை மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். இடம் மாற்றம் வெளியூர் மாற்றம் போன்றவை இருக்கும். பயணங்கள் அலைச்சல் தரக் கூடிய அளவில் இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் நிலையை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும். அரசு தொடர்பான காரியங்களில் ஓரளவே சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு வந்து நீங்கும்.
இன்றையநாள் நீங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்தும் நிதானமாக இருந்தும் இன்றைய நாளை கடக்க வேண்டும். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதி ஆகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே வாரம் வாரம் வெள்ளிக்கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள் உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீக்கி செல்வ யோகத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஊதா நிறம்