மகரம் ராசி அன்பர்களே..!! சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுக கூடும். முன்யோசனையுடன் விலகி இருப்பது மிகவும் நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை மட்டும் விலைக்கு வாங்க வேண்டாம். இன்று உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவ பொய் வீண் பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இந்த விஷயத்தில் மகர ராசி நேயர்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அரசியல் துறையினருக்கு பெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரக்கூடும். இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும்.
கணவன் மனைவி இடையே அன்பு இருக்கும். உடல் நிலையைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆதாயமும் நல்லபடியாக வந்து சேரும். இன்று முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது மட்டும் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்