மகரம் ராசி நண்பர்களே..!! இன்று நுட்பமான வேலையை சிறப்பாக செய்தாலும் நல்ல பெயர் இருக்காது. கூடுமானவரை பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பயணத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆன்மீக செலவுகள் அதிகமாகும். காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச்செல்லும். ஆனாலும் எந்த காரியத்தையும் செய்து முடிக்க கூடுதலாகத்தான் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.
அந்நிய மொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அது மட்டுமில்லாமல் இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கலகலப்புக்கு எந்த குறையும் இருக்காது.
கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு இன்று காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்