மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். வாழ்வில் எதிர்கொண்ட சிரமங்களை பற்றிய சிந்தனை குறையும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவதுபடி நடந்துகொள்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றமும் இருக்கும். கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்துக் கொள்ளுங்கள். இன்றையநாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்