Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “திறமை வெற்றிக்கு வழிவகுக்கும்”.. போட்டி பொறாமை குறையும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வீடு இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். இன்று எடுத்த காரியங்களை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள்.

திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு வழிவகுக்கும். போட்டிகளும் பொறாமைகளும் குறையும். இன்று எல்லாவற்றிலும் நன்மை இருக்கும். அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடிக் கொடுக்கும். இன்றைய நாள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |