Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “திடீர் மனமாற்றம் ஏற்படும்”.. நீங்கள் நினைத்தது நடக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பானவர்களின் ஆலோசனை நல்வழியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சீராக இருக்கும். எதிர்பார்த்த அளவில் வருமானமும் இருக்கும். விருந்து விழாவில் பங்கேற்கக் கூடிய சூழலும் இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனமாற்றம் ஏற்படும். உங்களுக்கு பெரியோரின் ஆலோசனை இன்று கைகொடுக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம் எதையுமே கவனமாக செய்யுங்கள். பாடங்களை படிக்கும் போது கொஞ்சம் கவனத்துடன் படியுங்கள். படித்த பாடத்தை  எழுதிப் பாருங்கள். இன்று ஓரளவு காரியத்தில் அனுகூலமும் ஏற்படும் நாளாகவே இருக்கும். இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவு பெறும் நாளாக இருக்கும். இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் எப்பொழுதும் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |