மகரம் ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகளை கொடுப்பார்கள். சாதித்துக் காட்டும் நாளாக தான் இன்று இருக்கும். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.
சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். பயணங்களின் போதும் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போதும் எப்பொழுதுமே எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது அலைப்பேசியில் பேசுவதை தவிர்த்து விடுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அடையக்கூடும். சக மாணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
இருந்தாலும் பாடத்தை கொஞ்சம் கண்ணும் கருத்துமாக படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்