மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே..!! இன்று பணத்தட்டுப்பாடு அகலும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்ற நபர் தானே வந்து உங்களை சந்திக்க கூடும். அலைபேசி வாயிலாக அனுகூல செய்திகள் வந்து சேரும். தனலாபம் உண்டாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை வராமலிருக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.
நீண்ட தூர தகவல்கள் நல்லவையாகவே இருக்கும். எதிலும் நிதானம் மட்டும் இருக்கட்டும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்