Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “நினைத்த வேலை முடியாமல் போகலாம்”.. கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக  இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறையும். குடும்ப சுமை கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயங்குபவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குதூகலத்திற்கும் எந்த வித குறையும் இல்லை.

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது மட்டும் எப்போதுமே நல்லது. எல்லாவகையிலும் நல்லதே உங்களுக்கு நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான சூழ்நிலை காணப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம்  உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |