மகர ராசி அன்பர்களே..!!! இன்று நீங்கள் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆதாயம் தரும் தகவல்கள் அலைபேசியின் மூலம் வந்து சேரும். சுப செலவுகள் உண்டாகும். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். தடைகள் விலகி செல்லும். பிள்ளைகளை மேற்பார்வையில் வைத்துக் கொள்வது தான் சிறப்பு. இன்று புதிய வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கு.
ஆபரணங்கள் சேர்க்கை சேரும். தடைப்பட்ட காரியங்களை செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்கும். மனம் உற்சாகமாக காணப்படும். உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும். அலுவலகம் செல்வோர்க்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரியிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.
அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையும் நிலவும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய, கொஞ்சம் கடினமாக உழையுங்கள். கடினப்பட்டு உழைத்து பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை தயவுசெய்து ஏறக்கட்டி விட்டு பாடங்களில் நீங்கள் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு சிறப்புமிக்க வழிபாடாக அமையும். நீங்கள் செய்யக் கூடிய காரியங்களை சிறப்பானதாக ஆக்கி கொடுக்கும்.