Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு…”வீண் பேச்சை பேசுபவரிடம் விலகி இருங்கள்”.. மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள்..!!

மகர ராசி அன்பர்களே…!! இன்று வீண் பேச்சை பேசுபவரிடம் விலகி இருங்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். முக்கிய செலவுக்காக என்று பணக்கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது மித வேகத்தில் செல்லுங்கள். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்து செல்லுங்கள் அது போதும். இன்று அத்தியாவசிய செலவு அதிகமாகவே இருக்கும், வரவும் இருக்கும். நீங்கள் எடுத்திருக்கும் பணிகளை மிகவும் கவனமாகவே மேற்கொள்வது நல்லது.

பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது போன்றவை தாமதப்பட்டு தான் வந்து சேரும். நண்பர்களிடம் நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கூடுமானவரை யாரிடமும் இன்னைக்கு வாக்குவாதம் மட்டும் செய்ய வேண்டாம். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். படித்த பாடத்தை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால்7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |