மகர ராசி அன்பர்களே…!! இன்று பகைமை குணத்துடன் பேசுபவர்களிடம் விலகி இருப்பது எப்போதுமே நல்லது. நண்பரின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வளர்ச்சி கடின உழைப்பினால் சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு வாகனத்தில் இடம் தர வேண்டாம். இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும்.
அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான நிலை காண்பீர்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஆர்வமிருக்கும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் கடிதமும் வரக்கூடும். இன்று பொறுப்புக்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். சரியான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
உடல்நலம் சீராக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.