எதையும் சாமர்த்தியமாக செய்யக்கூடிய மகரராசி அன்பர்களே..!! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நல்ல திருப்பங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அரசு உதவிகள், புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை இன்று எதிர்பார்க்கலாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்துப் பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும் .பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி ஏற்படும்.
மற்றவர்கள் விவகாரங்களில் தயவுசெய்து தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பஞ்சாயத்துக்கள் செய்யாமல் இருப்பதும் நல்லது. இன்று பொறுமையாக மட்டும் செயல்படுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ ஆரஞ்சு நிறத்தில் ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியத்திலும் வெற்றி வாய்ப்புகளை குறைக்க முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்