மகர ராசி அன்பர்களே,,!! இன்று பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். பிள்ளைகள் வழியில் பெருமை சேரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கவுரவம் கொடுப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். இன்று அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கூட நடக்கும்.
அதே போன்று நீங்கள் செய்கின்ற வேலையில் மிகவும் நேர்த்தியான சூழல் அமையும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்றைய பயணம் நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும். நல்ல அனுபவத்தையும் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். குடும்பத்தாரிடம் மட்டும் கொஞ்சம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். கணவன்-மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
இருந்தாலும் எப்போதும் சொல்வது போலவே படித்த பாடத்தை நன்றாக எழுதி பார்ப்பது ரொம்ப நல்லது. எழுதி பார்ப்பதினால் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடந்து முடியும். அதுபோல இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கனான அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்