Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “செயல்களை திட்டமிட்டு துவங்குவீர்கள்”.. காதலில் வயப்பட கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களை திட்டமிட்டு துவங்குவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.. தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும். யாரிடமும் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள்.

ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதாவது செய்யும் வேலைகளில் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பயணிகள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்களால் உங்களுக்கு அலைச்சல் இருக்கும். இருந்தாலும் புதிய அனுபவத்தை இன்று நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். இன்றைய நாள் ஓரளவு செல்வமிக்க நாளாகவும் இருக்கும். அதாவது அதிர்ஷ்டமான வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும். இதன் மூலம் காதலில் வயப்பட கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று மாணவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. கல்வியில் ஆர்வம் சிறப்பாக இருக்கும். சக மாணவனிடமும் அன்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் எப்பொழுதுமே உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |