மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் எளிதில் நடைபெறும் நாளாக இருக்கும். எதையும் ஒளிவு மறைவின்றி சொல்வீர்கள். வியாபாரப் போட்டிகள் விலகிச் செல்லும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். இன்று மாணவர்களுக்கு முயற்சியில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டும் என்றால் அதிக நேரம் படிப்பது நல்லது. கொஞ்சம் கடுமையாகவே உழையுங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி இன்றைக்கு சிறப்பாக இருக்கும்.
ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை யோசித்து செய்வது எப்போதுமே நல்லது.யாருக்கும் நீங்கள் உதவிகள் செய்யும் பொழுது ரொம்ப யோசித்து செய்யுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். அதே போல யாருக்கும் நீங்கள் பொருட்களையோ பணத்தையோ கடனாக இன்று நீங்கள் கொடுக்க வேண்டாம். கூடுமானவரை அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். இன்று மனைவி வழியில் உங்களுக்கு சிறுசிறு தொல்லைகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.
மனைவிடம் பேசும்போது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். எந்தவித வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்