Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “நம்பிக்கைகள் நடைபெறும்”.. தைரியம் பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அவர்களும் உங்களை விட்டுச் செல்லக்கூடும். இன்று எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் பிறக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள்.

உங்களுடைய பேச்சு திறமையால் காரிய வெற்றி ஏற்படும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு ஏற்படும். இன்றைய நாள் அனைத்து விஷயத்திலும் வெற்றி வாய்ப்புகள் குவியும்,  கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். அன்னியோன்யம் அதிகரிக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு இந்த நிறம் சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும்  மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |