Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “உங்கள் மதிப்பு உயரும்”… சந்தான பாக்கியம் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினரிடம் உங்கள் மீதான மதிப்பு உயரும். தொழில் வியாபாரம் செழிக்க சில சீர்திருத்தம் அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். புத்திரரின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். அக்கம்பக்கத்தார் இடம் இருந்து வந்த கசப்பு உணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தான பாக்கியம் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க தடைகள் கொஞ்சம் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்கள் அதிக வேலைப்பளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாகவே செய்வீர்கள். அலைச்சல்கள் கொஞ்சம் வரக்கூடும், அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் நிதானத்தையும் அதுமட்டுமில்லாமல் பொருட்கள் மீது கவனத்தையும் ஈர்ப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள்.

பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர்நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |