மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர் வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது ரொம்ப நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தரும் உணவுகளை உண்ண வேண்டாம். இன்று தன்னம்பிக்கை கூடும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் இருக்கட்டும். பணவரவு தாமதப்பட்டு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படி ஆன நிலை உருவாகலாம். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது ரொம்ப நல்லது. உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகவே செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் உடலில் வசீகரத் தன்மை இருக்கும். காதல் திருமணம் போன்றவை சிறப்பாகவே முடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்