தைரியத்தோடு போராடும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரவழி பிறக்கும். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். இன்று எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்வீர்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டை விட்டு வெளியே தங்கவும் நேரிடும். கடன் விவகாரங்களில் கவனமாக இருங்கள். உப தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாகத் தான் நடக்கும்.
இன்று ஓரளவு உபரி வருமானம் கிடைக்கும் நாளாக இருக்கும். மணமும் கொஞ்சம் மகிழ்ச்சியாக காணப்படும். வெளியூர் பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். இன்று உற்றார் உறவினர்கள் வகையிலும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். ஞாபக மறதியால் சில பொருட்களை வீட்டிலே வைத்து செல்ல நேரிடும். அந்த விஷயத்தில் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடையோ அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து சென்றால் அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்தவுடன் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்