மனிதநேய மிக்க மகர ராசி அன்பர்களே..!! இன்று எல்லா காரியங்களுமே உங்களுக்கு அனுகூலமாகவே முடியும். அரசு ஆதரவு, முக்கிய நபர்களின் பதவி உயர்வு புதிய வேலைவாய்ப்பு, சாஸ்திர மந்திர வித்தைகளில் தேர்ச்சி போன்றவை இருக்கும். இன்று அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் மட்டும் கூடும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் வந்து செல்லும். தீவிர முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். இன்று நீங்கள் மற்றவர்களை எளிதாக கவரக்கூடிய விதத்தில் இருப்பீர்கள். சக ஊழியரிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள்.
இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். அதன் மூலம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தன வரவிற்கு மட்டும் இன்றைய நாள் எந்த குறையும் இருக்காது. இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கூடுதலாக உழையுங்கள். படிப்பில் கவனத்தை செலுத்துங்கள். விளையாட்டை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்