மகர ராசி அன்பர்களே..!! இன்று அவசர பணி உங்களுக்கு இருக்கும் அக்கம் பக்கத்தினர் உடன் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் உங்கள் அனுபவத்தை பாதுகாக்கவும். உங்களுடைய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். இன்று வாகன பராமரிப்பும் இருக்கும். ஓய்வு நேரத்தில் இசை, பாடலை ரசியுங்கள் மனம் அப்போதுதான் அமைதியாக இருக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன் வருவார்கள். சுபகாரியம் கொஞ்சம் இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது தான். மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கக்கூடிய முடிவுகள் நன்மையை கொடுக்க கூடியதாக இருக்கும்.
பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இன்று மனதில் தேவையில்லாத கவலை இருக்கும். அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மற்றவரிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மனம் ஓரளவு மகிழ்ச்சியாக காணப்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது கருநீலத்தில் கைக்குட்டையை பயன்படுத்துவது சிறப்பு. உங்களுக்கு காரிய வெற்றி இருக்கும். செல்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கும் அதே போலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரக்கூடும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்டமான எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்டமான நிறம் : கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்