Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் இராசிக்கு… “மனதில் மகிழ்ச்சி உண்டாகும்”… காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும்.!!

அனைவரையும் தனது பேச்சாற்றலால்  கவரக்கூடிய மகரம் ராசி அன்பர்களே.!! தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பெருகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அவ்வப்போது மனதில் சின்னதாக பயம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். பரபரப்பு கொஞ்சம் இருக்கும். அவசரப்படாமல் காரியத்தை மேற்கொள்ளுங்கள்.

இன்று காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கும் அதை பார்த்துக்கொள்ளுங்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகளை இன்று செய்வது மிகவும் நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது அல்லது முக்கியமான காரியங்களுக்கு  நீங்கள் மஞ்சள் நிற ஆடையை அல்லது மஞ்சள் நிற கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |