மகரம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்கள் வழியில் அன்பு தொல்லைகளை சந்திக்க நேரிடும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும்.
அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது மட்டும் நல்லது. பண விஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதே தவிர்ப்பது நல்லது. இன்று ஆதாயம் ஓரளவு சிறப்பாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் முயற்சி எடுத்து பாடங்களைப் படியுங்கள் சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்