இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலத்திற்காக விளையாடுபவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது அணிக்காக சதம் அடிக்காமல், தங்களது சுயநலத்திற்காக சதம் அடிப்பவர்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் தங்களது நாடுகளுக்காக விளையாடுவதாகவும்,
சொற்ப ரன்கள் எடுத்தாலும் தங்களது அணிக்காக உண்மையாக உழைப்பை போட்டு அவரவருக்கான தனிப்பட்ட விளையாட்டை விளையாடாமல், நாட்டிற்காக விளையாடுவார்கள் என்றும், இந்தியாவைப் போல் தான் சாதம் அடிக்க வேண்டும் என்பதற்காக அணி தோற்றாலும் பரவாயில்லை என்று சுயநலத்துடன் விளையாட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் சமுகவலைத்தளங்களில் எழுந்து வருகின்றன.