டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 46 (26), டோனி 32 ரெய்னா 30 (16) , ரன்கள் குவித்தனர்.
இதையடுத்து வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, இந்த ஆடுகளத்தில் பந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக திரும்பியது என்று தெரிவித்தார். மேலும் பேட்டிங் செய்வதற்கு சாதகமான நிலையில் பனித்துளி போதுமான அளவுக்கு இருந்தது. பந்து வீச்சாளர்கள் அவர்கள் பணியை சிறப்பாக செய்தனர்.. அவர்கள் பணி பாராட்டுக்குறியது. டெல்லி அணியை 147 ரன்களில் கட்டுப்படுத்தி பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
மேலும் தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீரர் நிகிடி அணியில் இல்லாதது எங்களுக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு என்றும், பீல்டிங்கில் நாங்கள் ஒரு போதும் சிறந்து விளங்கவில்லை என்றாலும் மோசமாக பீல்டிங் இல்லாமல் பாதுகாப்பான பீல்டிங் எங்களிடம் இருக்கிறது. சில ரன்களை நாங்கள் இழந்தாலும் அனுபவத்தின் மூலம் அதனை சரி செய்கிறோம். பீல்டிங்கில் நாங்கள் செய்யும் குறையை பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் அதனை சரி செய்கிறோம் என்று தெரிவித்தார்.