தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அன்றே கேப்டன் சொன்னாரு.. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கேப்டன் அவர்கள் அடிக்கடி சொல்லுவாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாயில் ஒரு நிகழ்ச்சிகள் பங்கேற்றார். மூன்று முறை கரண்டு கட்டு அந்த நிகழ்ச்சியில்… அரை மணி நேரம் கலெக்டர் எல்லாரும் போன் அடிக்கிறாங்க, கரண்டு கனெக்ஷன் வரல. ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு துரைமுருகன் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்.
அதுக்கு அடுத்தது பொறியாளர்கள் இரண்டு பேரை சஸ்பெண்ட் பண்ணி இருக்காங்க. உங்களுக்கு மட்டும் மின்வெட்டு ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்டால் உடனே சஸ்பெண்ட் பண்றீங்க. இன்னைக்கு கோடிக்கணக்கான மக்கள் மின்சாரமே இல்லாமல் கஷ்டப்படுறாங்களே எத்தனை அதிகாரிகளை நீங்கள் சஸ்பெண்ட் செஞ்சீங்க ? என்பதை தமிழக அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும்.
இன்னைக்கு மின் கட்டண உயர்வு ஏன் ஏத்துனீங்க ? தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் கொடுத்தீங்களா ? தேர்தல் முடிஞ்சு நாங்க ஆட்சிக்கு வந்த உடனே மின் கட்டணத்தை உயர்த்துவோம் என்று ஸ்டாலின் அவர்களே உங்களுடைய தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு சொன்னீங்களா ? எல்லாமே பொய்யான வாக்குறுதிகள். ஆட்சிக்கு வந்த உடனே நீட்டை ஒழித்து விடுவோம், ஆட்சிக்கு வந்த உடனே டாஸ்மார்க்கை ஒழித்து விடுவோம்,
ஆட்சிக்கு வந்த உடனே தாய்க்குலமே உங்கள் எல்லாருக்கும் 1000 ரூபாய் கொடுப்போம். அது மட்டும் இல்லை, மின் கட்டணம் உயராது, விலைவாசி உயராது, எல்லாம் இலவசம், மானவர்களுக்கு இலவசம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு என எண்ணில் அடங்காத வாக்குறுதிகளை வீசி, இன்னைக்கு ஒரு பொய்யான ஆட்சியை அமைத்திருக்கிறது. திமுகா என்றாலே தில்லு முல்லு கட்சி என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்கள் என தெரிவித்தார்.