ஆஸ்த்ரேலியாவில் நடந்த மீன்பிடிபோட்டியில் 395 கிலோ எடையுள்ள சுறாவை பிடித்த சம்பவம் உலகளவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் ஏற்கனவே பல்வேறு சுற்றுச்சுழல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் கடல்வாழ் உயினங்களை பாதிக்கும் வகையில் , மீன்பிடித்தல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் சென்ற வாரம் நடைப்பெற்றது, சமூக ஆர்வலர்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இப்போட்டியில் டார்க் ஹோர்ஸ் குழுவினர் 395 கிலோ எடையுடைய சுறாவை பிடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .கேப்டன் பால் பார்னிங் தலைமையிலான இந்த குழு ஹேங்கிங் துறைமுகத்துக்கு இடையிலான பகுதியில் இந்த சுறாவை பிடித்தனர் . அதனை தங்கள் படகில் ஏற்றுவதற்காக சுமார் 45 நிமிடங்கள் போராடியுள்ளனர்.
மேலும் டைகர் சுறாவை பிடித்து படகில் ஏற்றும் போது எடுக்கபப்ட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியதால் சமூக ஆர்வலர்கள் அப்புகைப்படங்கள்களுக்கு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.