Categories
கிரிக்கெட் சினிமா தேசிய செய்திகள் விளையாட்டு

எதிர்காலம் ஜொலிக்கும்….. “கேப்டனுக்கு பிரியாவிடை” மோகன்லால் ட்விட்….!!

தோனியின் ஓய்வு குறித்து பிரபல நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி அனைவருக்கும் மிகவும் பிடித்தவர். இவரை வெறுப்பவர்கள் பட்டாளம்  குறைவு. ஆனால் இவரை நேசிப்பவர்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காதது. பிறநாட்டு மக்களும் தங்களது நாட்டு அணி விளையாடும் போதும் கூட, தோனி அவுட் ஆவதை  ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள்.

அந்த அளவுக்கு அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக அவரது விளையாட்டு இருக்கும். இந்நிலையில் தோனி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, ரசிகர்கள் கண்ணீர் கடலில் மிதக்கும் சூழ்நிலையில், பல பிரபலங்கள், தோனியின்  ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்டனுக்கு பிரியாவிடை. உங்கள் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறந்ததாக விளங்க என் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

Categories

Tech |