விஜயின் ரசிகர்கள் சிலர் இணையதள பக்கத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டு அது தற்போது தளபதி நடித்து வரும் பீஸ்ட் படத்தின் சூட்டிங்கில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறிவருகிறார்கள்.
பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகவும் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தினுடைய போஸ்டர் தளபதி விஜயின் பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது.
இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி படம் குறித்த ஆவலையும் தூண்டியுள்ளது. இதனையடுத்து பீஸ்ட் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் ரசிகர்கள் சிலர் பீஸ்ட் படப்பிடிப்பின் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறி இணையதளத்தில் மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை பதிவிட்டுள்ளார்கள்.