கார் கவிழ்ந்து விபத்து நேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பத்தினருடன் சிவகாசிக்கு சென்று பட்டாசுகள் வாங்கியுள்ளார்.
அப்போது மறையூர் கிருதுமால் ஆற்றின் குறுக்கே இருக்கும் வளைவில் கார் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சரவணன், அவரது மனைவி சசிகலா மற்றும் 2 குழந்தைகள் லேசான காயத்துடன் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.