கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வங்கி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் அஜய் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டத்திலுள்ள மந்தார குப்பத்தில் இருக்கும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து அஜய் சக ஊழியரான ரகுவரன் மற்றும் ரகுவரனின் அண்ணன் ரங்கநாதன் போன்றோருடன் சொந்த வேலை காரணமாக வடலூருக்கு ஒரு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அந்த வேலை முடிந்த பிறகு அவர்கள் 3 பேரும் மந்தாரக்குப்பம் நோக்கி காரில் புறப்பட்டுள்ளனர். இவர்களது கார் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேப்ளாநத்தம் கிராம எல்லைப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி இவர்களின் கார் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் அஜய் கார்த்திக் மற்றும் ரகுவரன் போன்றோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மந்தாரக்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.