கார் பள்ளத்தில் கவிழ்ந்து இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் காமராஜ் மற்றும் அவரது நண்பர் இளங்கோ இருவரும் சொந்தமாக ட்ரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று திருச்சிக்கு காரில் சென்றுள்ளனர். காரை இளங்கோ ஓட்டிச் சென்றுள்ளார்.
திருச்சியிலிருந்து தஞ்சைக்கு இருவரும் காரில் வந்துள்ளனர். அப்போது தஞ்சை – திருச்சி சாலையில் வரும் பொழுது திடீரென மாடு ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய கார் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.
இதனால் இருவரும் படுகாயங்களுடன் காரில் சிக்கினர். அப்போது அவ்வழியே சென்ற மக்கள் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.