அமெரிக்காவில் ஒரு நபர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கிச் சென்று வீட்டின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள நியூ மெக்ஸிகோ என்ற மாகாணத்தில் ஒரு நபர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக சென்ற வாகனம் திடீரென்று அவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டின் சுவரை இடித்து வாகனம் உள்ளே நுழைந்துவிட்டது.
நல்லவேளையாக, அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. மேலும் அந்த வீட்டின் வெளிப்புறத்திலும், உள்ளேயும் 4 நாய்கள் படுத்திருந்துள்ளது. இந்த விபத்து நேர்ந்த சில நொடிகளுக்கு முன்பு தான் அவை எழுந்து தப்பிச்சென்றிருக்கிறது. இதனால், உயிர் பலிகள் ஏதும் ஏற்படவில்லை.