கட்டுப்பாட்டை இழந்த கார் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்களின் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் சேது நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு காரில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களது கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த வழியாக சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்களின் கூட்டத்தில் புகுந்து விட்டது.
இந்த விபத்தில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த அருண்குமார், ராமலிங்கம், விசாலினி, கருப்பாயி, மாரிமுத்து போன்ற 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கு காரணமான சேது நாராயணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.