Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடதாம்பட்டி பகுதியில் ஜவுளி வியாபாரியான ரகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்களான தேவராஜின் மனைவி பேபி, பழனி, சரவணனின் மனைவி கௌரி போன்றோர் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பழனி. பேபி, ரகு, கௌரி போன்றோர் ஒரே காரில் தர்மபுரிக்கு புறப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் வீரியம்பட்டி கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன் பின் அங்கிருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரகுவும், பேபியும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதன் பின் மற்ற இரண்டு பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |